இந்தியா

இ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்

இ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்

jagadeesh

இ-சிகரெட்டுக்கு ‌தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, இறக்குமதிக்கு தடை விதித்து, அவசரச் சட்டத்தை செப்டம்பர் 18ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது.‌ அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், இருப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. 

தடையை மீறி இ சிகரெட் வைத்திருந்தால், ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் இல்லையென்றால், இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். இ-சிகரெட்டுக்கு ‌தடை விதிக்கும் மசோதா விவாதத்திற்குப் பிறகு, ‌மக்களவையில் நிறைவேறியது.