மோடி, அமித் ஷா எக்ஸ் தளம்
இந்தியா

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த உ.பி தேர்தல் முடிவுகள்; கோட்டைவிட்ட பாஜக! உற்சாகத்தில் காங். கூட்டணி

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக பின்னடைச் சந்தித்து வருகிறது.

Prakash J

மத்தியில் ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாக விளங்கக்கூடியது உத்தரப்பிரதேச மாநிலம். காரணம், இங்கு மட்டும்தான் நாட்டிலேயே மிக அதிகமான மக்களவைத் தொகுதிகள் (80) உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அதில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றும், அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருவது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைச் சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய I-N-D-I-A கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இதையும் படிக்க: ’தேர்தலிலும் சிக்சர் விளாசல்’ - மேற்குவங்கத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் காலிசெய்த யூசுப் பதான்!

தற்போது வரை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இத்தனைக்கும் இம்மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியில் உள்ளது. தவிர, பல தொகுதிகள் பாஜகவின் கோட்டையாக உள்ளது. மேலும் இம்மாநிலத்தில்தான் பல விவிஐபி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டு உள்ளனர். அப்படியான சூழலில், தற்போது பாஜக பின்னடைவைச் சந்தித்து வருவது பேசுபொருளாகி உள்ளது.

பாஜக

கடந்த 2014ஆம் ஆண்டு உ.பியில் பாஜக 71 இடங்களைப் பெற்றிருந்தது. அதுபோல் 2019ஆம் ஆண்டு தேர்தலில் உ.பியில் 62 இடங்களைப் பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகளில் (80) பாதிகூடப் பெற முடியாத நிலையில், பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், உத்தரப்பிரதேசத்தில் பாஜக வீழ்ச்சியைச் சந்திக்கிறதா எனக் கேள்வி எழுகிறது. ஏற்கெனவே அமேதி தொகுதியில் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி தோல்வி முகம் கண்டுவருகிறார். அவரது தோல்வி உறுதியாகியுள்ளது. இன்னும் பல பாஜகவின் வேட்பாளர்களும் பின்தங்கி உள்ளனர்.

இதையும் படிக்க: பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராய் பரேலி தொகுதியில் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். இன்னும் சொல்லப்போனால், உத்தரப்பிரதேசத்தின் வெற்றி நிலவரம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த தொகுதியில் மட்டும் கடந்த ஆண்டு தேர்தல்களைப் போலவே அதிக தொகுதிகளை பாஜக பெற்றிருக்குமானால், எந்தச் சிக்கலுமின்றி, இந்த ஆண்டும் 300 இடங்களைப் பெற்றிருக்க முடியும்.

பாஜக

தவிர, இங்கு பாஜக தோல்வியைக் கண்டிருப்பதால், ஆட்சியமைப்பதில்கூட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. இதனால்தான், இந்த முறை பெரும்பான்மையைக்கூட எட்டமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உத்தரகாண்ட் (5 மு.தொகுதி/5 மொ.தொகுதி), பீகார் (32/40), குஜராத் (25/26), ராஜஸ்தான் (14/25), ஒடிசா 19/21), சத்தீஷ்கர் (10/11), மகாராஷ்டிரா (19/48) ஆகிய இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்க: கேராளாவில் சுரேஷ் கோபி வெற்றி.. தென்னிந்தியாவில் I-N-D-I-A கூட்டணி-க்கு டஃப் கொடுத்த பாஜக!