இந்தியாவில் நாடு முழுவதும் முதற்கட்டமாக நாளை 102 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அவை என்னென்ன? எந்தெந்த மாநிலத்தில் இருந்து எத்தனை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது? பார்ப்போம்...
தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுச்சேரியின் 1 தொகுதி, அருணாச்சலப்பிரதேசத்தின் 2 தொகுதிகள், அசாமின் 5 தொகுதிகள், பீகாரின் 4 தொகுதிகள், சத்தீஷ்கரின் ஒரு தொகுதி, மத்தியப்பிரதேசத்தின் 6 தொகுதிகள், மகாராஷ்ட்ராவின் 5 தொகுதிகள் ஆகியவற்றுக்கு முதற்கட்டமாக நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதேபோல மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா 2 தொகுதிகள, மிசோரம், நாகாலாந்தின் தலா ஒரு தொகுதி, ராஜஸ்தானின் 12 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
போலவே சிக்கிம், திரிபுராவின் தலா ஒருதொகுதி, உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகள், உத்தராகண்ட்டின் 5 தொகுதிகள், மேற்குவங்கத்தின் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் அந்தமான், நிகோபர், ஜம்மு, காஷ்மீர், லட்சத்தீவுகளின் தலா ஒருதொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.