அமைச்சர் அன்பளிப்பாக கொடுத்த சைக்கிள் கூகுள்
இந்தியா

கேரளா|சொந்த சைக்கிளுடன், அமைச்சர் கொடுத்ததும் காணாமல் போனதால் மாணவி விரக்தி; இறுதியில்நடந்த ட்விஸ்ட்

Jayashree A

சொந்த சைக்கிள் காணாமல் போனதுடன், அமைச்சர் கொடுத்த சைக்கிளும் காணாமல் போனதால் அதிர்ச்சி... அடுத்தடுத்து நடந்த திருட்டால் வருத்தமடைந்த மாணவி, இறுதியில் என்ன நடந்தது?

கேரளா எர்ணாகுளத்தை அடுத்து உள்ள தம்மனத்தில் காய்கறிக்கடை நடத்தி வருபவர் கிரீஷ் நிஷா தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகள் அவந்திகா... இவர் எர்ணாகுளத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் தினமும் எர்ணாகுளத்தில் இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்தமாதம் இவரது சைக்கிள் திருடு போய் உள்ளது. இது குறித்து பாலாரிவட்டம் காவல் நிலயத்தில் புகார் கொடுத்ததுடன், கேரள அரசாங்கத்திற்கு திருடு போன சைக்கிள் குறித்து மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரம் முன், அவந்திகாவிற்கு கேரள அரசாங்கத்திடமிருந்து பதில் ஒன்று வந்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட தினத்தன்று விடுமுறை எடுக்காமல் அவசியம் அவந்திகா பள்ளிக்கு வரவேண்டும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வருவார் என்றும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி கேரள அரசாங்கம் சொன்ன தினதன்று பள்ளி சென்ற அவந்திகாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி அவந்திகாவை அழைத்து சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது குறித்து அவந்திகா மட்டுமின்றி அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.

மறுபடி புதுசைக்கிளில் அவந்திகா பள்ளிசென்று வர.... சோதனையாய், அமைச்சர் பரிசாக கொடுத்த சைக்கிளும் கடந்த வாரம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் வருத்தமடைந்த அவந்திகா மீண்டும் காவல் நிலையம் சென்று அமைச்சர் கொடுத்த சைக்கிளும் திருடு போனது பற்றி புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து பாலாரிவட்டம் போலிசார் அவந்திகாவின் பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவியின் உதவியுடன் காணாமல் போன சைக்கிள் குறித்து சோதனை செய்தனர்.

சிசிடிவியில், சம்பவ தினத்தன்று அதிகாலை ரெயின்கோர்ட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவன் அவந்திகாவின் புது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றது தெரிந்தது. அதன்படி திருடன் சென்ற திசையை கண்காணித்த போலிசார், அப்பகுதியில் இருந்த வைட்டிலா பாலத்தின் கீழ் திருடன் சைக்கிளுட தங்கியிருந்தது தெரிந்தது. திருடனை பிடித்த போலிசார் அவந்திகாவின் சைக்கிளை மீட்டுள்ளனர்.