இந்தியா

கவிழ்ந்த லாரி.. சரிந்த மதுபாட்டில்கள்.. குஷியில் அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள் !

கவிழ்ந்த லாரி.. சரிந்த மதுபாட்டில்கள்.. குஷியில் அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள் !

jagadeesh

சத்தீஸ்கர் மாவட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் ஏற்றிவரப்பட்ட மதுபாட்டில்களை பொது மக்கள் திருடிச் சென்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கவார்தா எனும் இடத்தில் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்துக்கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் கீழே விழுந்தது. பல மதுபாட்டில்கள் அடைப்பெட்டியில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டதால் உடையாமல் இருந்தது.

மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதையடுத்து அருகில் இருந்து வந்த கிராம மக்கள் பார்த்தனர். அப்போது லாரியில் இருந்த மதுபாட்டில்களை உடனடியாக திருடிச் செல்ல தொடங்கினர். இதனையடுத்து விபத்துக்குள்ளான இடத்துக்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் வந்ததை பார்த்த பொது மக்கள் அவசர அவசரமாக மதுபாட்டில்களை மறைத்து கொண்டு சென்றனர். போலீஸாரால் அவர்களை தடுக்க முடியவில்லை.

இது குறித்து கலால்துறை அதிகாரி ஒருவர் கூறியது "200 கா்ரடன்களை கொண்ட மதுவகைகளை இந்த லாரி ஏற்றி வந்தது. இந்த மதுவகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும். சேதமடைந்த மதுபாட்டில்களின் தொகை எவ்வளவு என தெரியவில்லை" என்றார்.