பீகாரில், எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மோகாமா ( Mokama) தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது மூதாதையர் வீடு, அதே மாவட்டத்தின் லட்மா கிராமத்தில் உள்ளது. அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடை த்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதை செயலிழக்கச் செய்த னர். இதுதொடர்பாக அந்த வீட்டை பராமரித்து வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘’எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை நடத்தினோம். அதில் ஏ.கே.47, வெடிகுண்டுகள் உட்பட சில ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்கள், எம்.எல்.ஏ.ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார் பாட்னா போலீஸ் எஸ்.பி கந்தேஷ் குமார் மிஸ்ரா. இந்த வழக் கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ ஆனந்த சிங் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. ’சோட்டா சர்கார்’, மோகாமா டான் என்ற பட்டப் பெயர்களுடன் அழைக்கப்படும் அவர், சோதனை நடந்த போது வீட்டில் இல்லை.