இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. மும்பையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
60 மீட்டர் நீளம் கொண்ட சிறிய ரக நீர் மூழ்கிக் கப்பலான இதனை மும்பையிலுள்ள மசகான் கப்பல் கட்டும் மையம் உருவாக்கியுள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் எதிரி நாட்டு கப்பல்களை ஏவுகணைகளை வீசி வீழ்த்துவதில் ஐஎன்எஸ் கரஞ்ச் வலிமைமிக்கது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கியை அடுத்து ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.