இந்தியா

வாழத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்! முதல் 100 இடங்களுக்குள் ஒரு இந்திய நகரம் கூட இல்லை!

வாழத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்! முதல் 100 இடங்களுக்குள் ஒரு இந்திய நகரம் கூட இல்லை!

ச. முத்துகிருஷ்ணன்

உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து சென்னை உள்ளிட்ட 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் வசிக்கத்தக்க இந்த ஆண்டுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை பொருளாதார புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. 173 நகரங்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவில் இருந்து 5 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

சிறந்த நகரத்திற்கான தரத்திற்கு முதல் 100 இடங்களுக்குள் இருப்பது குறியீடாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு நகரம் கூட முதல் 100 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரங்கள் 140 முதல் 146 வரை மட்டுமே இடம்பிடித்துள்ளன. இதில் 140ஆவது இடத்தில் டெல்லி, 141ல் மும்பை, 142ல் சென்னை ஆகியவை இடம்பெற்றுள்ளன. அகமதாபாத் 143ஆம் இடத்திலும் பெங்களூரு 146ஆம் இடத்திலும் உள்ளன.

நிலைத்தன்மை, சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய ஆறு காரணிகளின் அடிப்படையில் சிறந்த நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  இப்பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் தலைநகரம் வியன்னா இடம்பெற்றுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் 2 ஆம் இடத்திலும், சுவிட்சர்லாந்து தலைநகர சுரிச் 3 ஆம் இடத்திலும் இடம்பெற்றுள்ளது.