இந்தியா

நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியல்: சென்னைக்கு 8ஆம் இடம்

நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியல்: சென்னைக்கு 8ஆம் இடம்

Veeramani

சர்வதேச அளவில் 2021ஆம் ஆண்டு நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா தொற்று விமான போக்குவரத்து துறையை உலக அளவில் சென்ற வருடம் ஸ்தம்பிக்க வைத்தது. 2020ம் வருடம் தொற்று பாதிப்பு காரணமாக 36% விமானங்கள் உலக அளவில் ரத்து செய்யப்பட்டன. 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்து துறை சற்று ஏற்றம் காண ஆரம்பித்தது பல நாடுகளில் இரண்டாவது அச்சுறுத்தல் இருந்தபோதிலும் 2.5 கோடி விமானங்கள் 2021ம் ஆண்டில் இயக்கப்பட்டுள்ளன. இது 2020 ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில் வீழ்ச்சி அடைந்துள்ள விமான துறையை மேம்படுத்துவதற்காக ஒரு வருடமாக விமான நிறுவனமான சிரியம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. விமானப் போக்குவரத்தில் காலதாமதம், விமான நிலையங்களின் செயல்பாடு, விமானத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு உலக அளவில் தரவு கண்காணிப்பு நடத்தியது. அதில் காலம் தவறாமை எனும் பிரிவில் சென்னை விமான நிலையம் தேர்வாகியுள்ளது.

சென்னை விமான நிலையம் உலக அளவில் எட்டாவது நேரம் தவறாத ( punctual ) விமான நிலையமாக விமான தரவு இணைய நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் 89.32 % சரியான நேரத்தில் புறப்படுவதாகவும், வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இட்டாமி விமான நிலையம் 96.51 % முதல் இடத்தில் உள்ளது.

2021ல் 49,923 விமானங்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 70 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. முதல் நான்கு இடத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவின் ஷெரெமெட்டியோ விமான நிலையம் உள்ளது. உலக அளவில் பெரிய விமான நிலையங்கள் என்கிற பட்டியலில் முதல் 30 இடத்தில் இந்தியாவில் சென்னை விமான நிலையம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் 232,226 விமானங்களை கடந்த வருடம் இயக்கியுள்ளது. அதில் 87.6 % விமானங்கள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.