இந்தியா

புதுச்சேரியில் தளர்வுகளுடன் 14-ம் தேதி வரை ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

புதுச்சேரியில் தளர்வுகளுடன் 14-ம் தேதி வரை ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

Veeramani

புதுச்சேரியில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் குளிரூட்டப்படாத அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழம் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 50% பயணிகளுடன் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  திறந்திருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மாலை 5 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, கடற்கரை சாலையில், நடைபயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.