மாடுகளை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற புதிய சட்டத்தை குஜராத் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மாட்டிறைச்சி விற்பதற்கும் வாங்குவதற்கும் எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுள்ளது. மாடுகளை கொல்பவர்களுக்கு குறைந்த பட்சமாக 7 ஆண்டுகளும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்க இந்தப் புதிய சட்டம் வகை செய்கிறது. மாடுகளை கொல்வதை ஜாமீன் வழங்க முடியாத குற்றமாகவும் இந்த சட்டம் மாற்றியுள்ளது. இந்த குற்றத்திற்கான குறைந்தபட்ச அபராத தொகை ரூ 1 லட்சம். மேலும் மாட்டிறைச்சியின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அந்த சட்டம் கூறுகிறது.