இந்தியா

16 வயதில் மின்சார ஸ்கூட்டர் ஓட்ட லைசென்ஸ் - மத்திய அரசு ஒப்புதல்

rajakannan

கியர் இல்லாத மின்சார ஸ்கூட்டர் ஓட்ட 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு லைசென்ஸ் வழங்கலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 16 வயதுடையவர்களுக்கு 4 கிலோவாட் வரை திறனுள்ள மின்சார இருச்சக்கர வாகனத்துக்கு லைசென்ஸ் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் வேகம் 50 சிசி மற்றும் அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார ஸ்கூட்டருக்கு 50 சிசியின் வேகம் இல்லை என்றாலும் நடைமுறையில் இருக்கும் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்துக்கு செல்லும் மின்சார ஸ்கூட்டரை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து கடந்த டிசம்பரில் அரசாணை வெளியிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.