model image freepik
இந்தியா

உ.பி.: எதிர்ப்புகளை மீறி பாரம்பரிய முறைப்படி கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஜோடி!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தன்பாலின ஜோடி ஒன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டது.

Prakash J

மேற்குவங்கத்தைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயஸ்ரீ ராகுல் (28) மற்றும் ராக்கி தாஸ் (23). இந்த இரண்டு பெண்களும் தியோரியாவில் உள்ள ஓர் இசைக் குழுவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதற்காக அவர்கள் முதலில் தங்களுடைய திருமணத்திற்கான நோட்டரி சான்றிதழைப் பெற்றனர். பின்னர் அவர்கள் தியோரியாவில் உள்ள பகதா பவானி கோயிலில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

முன்னதாக இவர்கள் இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு திர்கேஷ்வர்நாத் கோயிலில் திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால், அங்கே அவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

model image

மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாததைக் காரணம் காட்டி அவர்களுடைய திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்துத்தான், அவர்கள் திருமணத்துக்கான மாற்றுவழியைத் தேடியுள்ளனர். அதன்பயனாகத்தான் திருமணத்துக்கான நோட்டரி சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

பின்னர், பகதா பவானி கோயிலுக்குச் சென்று, பூசாரி முன்னிலையில் மாலைகளை மாற்றிக் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தங்களுடைய காதல் கதைகளையும் எதிர்கொண்ட சவால்களையும் ஓர் அறிக்கையாகக் கொடுத்துள்ளனர்.