சிங்கம், சிறுத்தை, புலி என்றாலே பயப்படாதவர்கள் இருக்கமுடியாது. ஊருக்குள் புலி வந்துவிட்டால் அவ்வளவுதான். நேற்று மும்பையின் ஆரே பால் காலணியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்று புகுந்திருக்கிறது. காட்டிலிருந்து வழிமாறி வந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சத்தமிட்டு விரட்டமுயன்ற ஊர்மக்களிடம் கோபமாக சீறும் சிறுத்தைக் குட்டியை வீடியோ எடுத்து ஏஎன்ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த சிறுத்தைக் குட்டி ஊருக்குள் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியிலும் பதிவாகி இருக்கின்றன.
அங்கிருந்த மக்கள் அதிகமாக சத்தம் போட்டதால் பயந்துபோன சிறுத்தை, அவர்களிடம் ஆக்ரோஷமாக சீறிபாயும் அந்த வீடியோவை பலரும் பார்த்துவருகின்றனர். வனத்துறையினர் சிறுத்தைக் குட்டியை மீட்டு காட்டுக்குள் விட்டிருக்கின்றனர். அதிர்ட்ஷவசமாக இந்த சம்பவத்தால் ஒருவரும் பாதிப்படையவில்லை.