இந்தியா

செலுத்தியது ரூ.1,590; கிடைத்தது ரூ.1 கோடி

Rasus

மொபைல் ஃபோனை மாதத் தவணையில் வாங்க மின்னணு பரிமாற்றமாக 1,590 ரூபாய் செலுத்திய பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு கிடைத்திருக்கிறது.

வர்த்தக நிறுவனங்களில் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரதமர் மோடி ‘லக்கி கிரஹக் யோஜ்னா’ என்ற பரிசுத் திட்டத்தை அறிவித்து இருந்தார். இதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கு ‘டிஜிதன் வியாபார் யோஜ்னா’ என்னும் குலுக்கல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர் பிரிவில் மராட்டிய மாநிலம் லட்டூர் நகரைச் சேர்ந்த மாணவி ஸ்ரதா மெங்சீத்தேவுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது.

ரூபே கார்டு மூலம் பணம் செலுத்திய அவருக்கு மின்னணு பரிமாற்ற ஊக்கத் தொகை திட்டத்தின்கீழ், குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒரு கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ரதா.