ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள். தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அபராத தொகையும் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்தனர்.
ஒரே நேரத்தில் பலர் வலைதளத்தை அணுகியதால் அந்த பக்கம் முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். தொடர்ந்து முடங்கிபோன வலைத்தளம் இயல்பு நிலைக்கு திரும்பி இயங்கி வருகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் இந்த அபராதத்தை அரசு விதித்துள்ளது. இதற்கென வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காமல் உள்ள பயனர்களின் வித்தியாசம் அதிகமாக உள்ளது. அதனால் அதை கருத்தில் கொண்டு அரசு கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென சாமானிய மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.