இந்தியா

பருவ மழையால் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம்... தெற்கு ஆசியாவில் தொடரும் உயிரிழப்புகள்

பருவ மழையால் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம்... தெற்கு ஆசியாவில் தொடரும் உயிரிழப்புகள்

webteam

கடந்த வாரத்தில் தொடர் கனமழை காரணமாக நேபாளத்தின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஐந்து வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியா, நேபாளம் உள்ள தெற்காசிய நாடுகள் பருவமழையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

மலைகளால் சூழ்ந்துள்ள நேபாளத்தில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் இதுவரை 260 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அத்துடன் 76 பேரை காணவில்லை எனவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கு கடந்த ஆண்டுகளின் சராசரி அளவைவிட அதிக அளவில் மழை பெய்துள்ளது. கட்ச் பாலைவனப் பகுதியில் சராசரியைவிட 2.5 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 லட்சத்துக்கும் அதிமான மக்கள் கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அஸாம் மற்றும் வங்கதேசத்திலும் பருவமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.