இந்தியா

மட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்!

மட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்!

webteam

சயனைடு சூப் கொடுத்து 6 பேரை கொலை செய்த ஜூலி தாமஸ் என்பவர் கதையை மையமாக வைத்து 2 திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு கதையில் மோகன் லால் நடிக்கிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது ஜூலிக்கு. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி, இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை கூண்டோடு முடித்துவிட நினைத்தார்.

அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடு வாங்கியுள்ளார். ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.
  

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டி ருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்னை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி. 

சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்க ளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருந் தார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க, உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த சீரியல் கொலை சம்பவம் தொடர்பாக கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து கேரளாவில் 2 திரைப்படங்கள் உருவாகின்றன. ’த்ரிஷயம்’ படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்போது ஒரு த்ரில்லர் கதையை படமாக்கும் முயற்சியில் இருந்தார். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவக்கதை கிடைத்துள்ளதால், இந்த கதையை படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இதில் மோகன்லால் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். 

இதற்கிடையே, இயக்குனர் ரோனெக்ஸ் பிலிப் இந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் இயக்குகிறார். ‘கொலபாத கண்களூ டே ஒன்னர பத்திதண்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் டினி டேனியல், கொலைகளைச் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். அலெக்ஸ் ஜோசப் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப் பட்டுள் ளன.