இந்தியா

டெல்லியைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் காற்று மாசு

டெல்லியைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் காற்று மாசு

jagadeesh

டெல்லியில் நிலவும் காற்று மாசுவைப் போல் கொல்கத்தாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா ஃபோர்ட் வில்லியம் தானியங்கி காற்று மாசு கண்காணிப்பு நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் குறியீட்டு எண் 300-ஆக பதிவானது. இதேப்போல் கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதியில் காற்று மாசு 300ஐ தாண்டி பதிவானதாக மேற்குவங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா, ஹவுரா நகரில் 15 வருட முந்தைய வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும், காற்று மாசு ஏற்பட்ட பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சியடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகரமான டெல்லி காற்று மாசு பிரச்னையால் சிக்கித் தவித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு அங்கு எடுக்கப்பட்ட ஏக்யூஐ (காற்று மாசு அளவீடு) அளவீட்டின்படி, காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இருமல், சுவாசப் பிரச்னைகள் போன்றவை ஏற்பட்டு வருகின்றன. காற்று மாசு டெல்லியில் பனிமூட்டம் போல படிந்திருப்பதால், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. பின்பு, நிலை ஓரளவுக்கு கீழ் இறங்கியுள்ளது.