இந்தியா

“முழு பேண்ட் போட்டுட்டு வாங்க” - ஷார்ட்ஸ் அணிந்தவருக்கு எஸ்.பி.ஐ வங்கியில் அனுமதி மறுப்பு

“முழு பேண்ட் போட்டுட்டு வாங்க” - ஷார்ட்ஸ் அணிந்தவருக்கு எஸ்.பி.ஐ வங்கியில் அனுமதி மறுப்பு

கலிலுல்லா

ஷார்ட்ஸ் அணிந்ததற்காக கொல்கத்தாவை சேர்ந்த ஒருவருக்கு எஸ்பிஐ கிளையில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் எஸ்பிஐ வங்கிக்குள் நுழைய ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. ஆஷிஷ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குள் சென்றுள்ளார். அவர் அணிந்த உடைகாரணமாக அவருக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஷார்ட்ஸ் அணிந்துவந்தவரை வீட்டிற்கு சென்று முழு பேண்ட் அணிந்து வருமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆஷிஸ், ''நாகரீகத்தை கடைபிடியுங்கள் என்று கூறி, ஷார்ட்ஸ் அணிந்து உங்கள் வங்கி கிளைக்கு வந்த எண்ணை அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்'' என்று கூறி எஸ்பிஐ வங்கிக்கு டேக் செய்திருக்கிறார்.''ஒரு வாடிக்கையாளர் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்று உங்கள் பாலிசியில் ஏதாவது இருக்கிறதா? அதிகாரப்பூர்வ கொள்கை உள்ளதா?" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு புனேவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகவும், அதில் ஒரு நபர் பெர்முடா ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால் நுழைய மறுக்கப்பட்டதாகவும் ஆஷிஷ் தெரிவித்தார். அவரது ட்விட்டர் பதிவுக்கு 2,700 பேர் லைக் செய்துள்ளனர். பலரும் ஷேர் செய்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.