இந்தியா

வேட்டி அணிந்து சென்றதால் மாலுக்குள் அனுமதி மறுப்பு

வேட்டி அணிந்து சென்றதால் மாலுக்குள் அனுமதி மறுப்பு

webteam

வேட்டி அணிந்து சென்றதால் வணிக வளாகத்திற்குள் ஒருவரை அனுமதிக்காத சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. 
கொல்கத்தாவை சேர்ந்த நடிகர் டப்லீனா சென் என்பவர் தனது நண்பர் ஒருவருடன் கொல்கத்தாலில் உள்ள ஒரு மாலுக்கு சென்றுள்ளார். அப்போது பாரம்பரிய ஆடையான வேட்டி குர்தா அணிந்து சென்றுள்ளார். வேட்டி அணிந்து வந்ததால் அவரை மாலுக்கு வெளியே நிறுத்தி அனுமதி மறுத்தது அந்த மால் நிர்வாகம். இந்த சம்பவத்தை மொபைலில் வீடியோவாக பதிவு செய்து தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டப்லீனா. அதில் இந்த சம்பவம் முதல் நிகழ்வல்ல. பல நடசத்திர விடுதிகளுக்குள் வேட்டி கட்டி செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் ஒரு வணிக வளாகத்திற்குள் அனுமதி மறுப்பது இது தான் முதல் முறை. பாரம்பரிய உடையான வேட்டி கட்டிச் சென்றால் அனுமதிப்பு மறுப்பது எந்தவகையில் நியாயம்? மாலில் உள்ளே இருந்த நிர்வாகிகளை அழைத்து ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் எனக் கேட்டோம். அவர்கள் வேட்டி மற்றும் லுங்கி அணிந்து வந்தால் அனுமதி இல்லை எனத் தெளிவாக கூறிவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.