இன்ஸ்டாகிராம் ட்ரோல் Facebook
இந்தியா

நான் முஸ்லீமாக இருந்தாலும்... இன்ஸ்டாகிராம் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர்

ஜெனிட்டா ரோஸ்லின்

தொலைக்காட்சி நடிகர்களான கிஷ்வர் மெர்ச்சண்ட் கடந்த 2016, டிசம்பர் 16-ஆம் தேதி சுயாஷை திருமணம் முடித்தார். கிஷ்வர் மதத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லீம். சுயாஷ் இந்து ஆவார்.

இவர்களுக்கு நிர்வைர் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தவகையில், கிஷ்வர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் குறும்புத்தனமாக படங்களை பகிர்ந்து மகிழ்வதுண்டு. அந்தவகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு போஸ்ட் ட்ரோலிங்கிற்கு உள்ளாக்கப்பட்டது.

அதாவது, கிஷ்வரின் மகன் தொழுகை செய்யும் தலைப்பாகையை அணிந்து, முஸ்லீம்களின் பிரதான பிரார்த்தனை முறையான தொழுகையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, ‘மனிதநேயம் நிச்சயம் அவரது மதத்தில் மலரும்’ என்று பதிவிட்டார்.

ஆனால், இந்தப் பதிவை பார்த்த பலர், ‘நடிகை தனது மகனுக்கு ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக் கற்றுக்கொடுத்தாரா?’ என்றும்..’இவர்கள் இருவரும் இந்துக்களாக இருந்தால் . இவர்கள் ஏன் முஸ்லீம் சடங்கை கற்றுக்கொடுக்க வேண்டும்?’ என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ”தலையில் இருந்த தொழுகை செய்யும் தலைப்பாகையை கண்ட யாரும், கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை பார்க்கவில்லையா?” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இது குறித்து, ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பதிலளித்துள்ளார். அதில், “ நான் ஒரு இந்துப் மணப்பெண்ணை மணந்த இஸ்லாமியர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், தேவாலயத்திற்கும், கோயில்களுக்கும், செல்வதுண்டு. நான் எல்லாவற்றையும் செய்கிறேன்.

தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் என்று அனைத்தையும் கொண்டாடுகிறோம். நீங்கள் அவற்றிக்கு பெயர் வைக்கிறீர்கள், நாங்கள் அவற்றை கொண்டாடுகிறோம். எனது மகன் சிறியவனாக இருந்தாலும் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான்.

நாங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம், என் அம்மாதான் சாண்டாவாக மாறுவார். இப்படியெல்லாம் இருக்க, ஒரு அழகான வீடியோவுக்காக ட்ரோல் செய்யப்படுவது முட்டாள்தனமானது. அதை செய்பவர்கள் மூளையில்லாதவர்கள். அதாவது,அவர்கள் வெறுப்பைப் பரப்புவதற்காகவே இருக்கிறார்கள்.

நான் முஸ்லீமாக இருந்தாலும், எனது மகனுக்கு இந்துப் பெயரை வைத்தேன், இது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ஆனால் அவர் ஒரு முஸ்லீம் தலைப்பாகை அணிவது உங்களுக்கு மோசமாக தெரிகிறது. இந்த சிந்தனை மிகவும் அருவருப்பானது. அப்படிப்பட்டவர்களின் சிந்தனையும் தரமும் மிகவும் குறைவாக இருப்பதால் நான் உண்மையில் அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்.

அது அவர்களின் வளர்ப்பில் இருப்பதால் நாம் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், என் குழந்தை அப்படி இருக்க எனக்கு விருப்பமில்லை, அதனால்தான் அவனை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று கடவுள் ஒருவரே என்று நம்ப வைக்கப்போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.