இந்தியா

தேன் கூட்டை பின்பக்கம் சுமந்து கொண்டு திரியும் விநோத மனிதர்

தேன் கூட்டை பின்பக்கம் சுமந்து கொண்டு திரியும் விநோத மனிதர்

Rasus

மத்திய இணையமைச்சர் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

தேனை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் தேனை நேரடியாக எடுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். மரங்களிலோ, முள் வேலி என வேறு எங்கேயாவது நாம் தேன் கூட்டை பார்த்திருப்போம். தேனீக்கள் பல ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டை அமைத்து அதில் தேனை சேகரிக்கும்.

ஆனால் இங்கு தேன் கூடானது ஜீன்ஸ் பேன்டில் இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சரான கிரண் ரிஜிஜூ இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இளைஞர் ஒருவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேன்டின் பின்பக்கத்தில் தேனீக்கள் பல ஒன்றுசேர்ந்து கூடு அமைத்துள்ளது. இந்த வீடியோவுக்கான கேப்சனில், தேனீக்களின் கூடானது விரும்பத்தகாத இடத்தில் உள்ளது. ஆனால் இது நாகாலாந்தில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இது எப்படி என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த இளைஞர் அந்த ஜீன்ஸ் பேன்டை எங்கிருந்து எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தேனீக்கள் வளர்ப்பு நாகாலாந்தில் பெயர் போனது என்றாலும் இப்படிக் கூட நடக்குமா என மக்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.