இந்தியா

பாம்பு கடித்த மகள்களை சாமியாரிடம் அழைத்துச்சென்ற பெற்றோர்! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்

Abinaya

ராஜஸ்தானில் நள்ளிரவில் பாம்புக் கடியைக் குணமாக்க மருத்துவமனைக்கு பதிலாகத் தனது பெண் பிள்ளைகளைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அந்த 2 பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இரவு நேரத்தில் இரண்டு சிறுமிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர்களை விஷப்பாம்பு கடித்துள்ளது. அலறியடித்து எழுந்த சிறுமிகள் உடனே மயக்கமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இருவரையும் தூக்கிச்சென்று, அலிபூர் கிராமத்தில் உள்ள பக்த வாலா பாபாவிடம் குணமடைய வேண்டியுள்ளனர்.

விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு அடுத்த 3 மணி நேரம் தான் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான நேரம். அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் பிராத்தனை செய்து பெற்றோரின் மூட நம்பிக்கையால் 2 பெண் சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

சாமியார் பாபா, அழைத்து வந்த சிறுமிகளின் தலையில் துடைப்பங்களால் அடித்து மந்திரங்கள் ஓதியுள்ளார். அவ்வாறு செய்து மூன்று மணிநேரமாகியும், சிறுமிகளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, தாமதமானதால் சிறுமிகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்புக் கடிக்கு உடனடி சிகிச்சை வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாமல், சாமியாரை நம்பும் மூடநம்பிக்கைகள், இந்தியாவில் இன்னும் இருப்பது அதிர்ச்சியுள்ளது.