வைஷாக் கூகுள்
இந்தியா

கேரளா | தூக்கத்தில் 30 அடி ஆழ் கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டி.. துணிச்சலுடன் காப்பாற்றிய இளைஞர்!

திருவனந்தபுரத்தில் 30 அடி ஆழ்துளை கிணற்றில் 70 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் விழுந்துள்ளார். அவரை உறவினர் ஒருவர் காப்பாற்றிய செய்தி வைரலாகி வருகிறது.

Jayashree A

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் ஆங்காங்கே விழும் அசம்பாவிதத்தை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 30 அடி ஆழ்துளை கிணற்றில் 70 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் விழுந்துள்ளார். அவரை உறவினர் ஒருவர் காப்பாற்றிய செய்தி வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரத்தை அடுத்த நாலாஞ்சிரா அம்பநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ராதா. சம்பவதினத்தன்று ராதா நாலாஞ்சிராவில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி ராதா, அவரது வீட்டின் பின்கட்டிற்கு சென்றுள்ளார்.

அவரின் வீட்டின் பின்கட்டில் சுமார் 30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தூக்கக்கலக்கத்தில் சென்ற ராதா நிலைத்தடுமாறி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

மூதாட்டி விழுந்த சத்தம் கேட்டதும், அவரது பேத்தியின் கணவரான வைஷாக், சற்றும் தாமதிக்காமல், தனது இடுப்பில் ஒரு கயிற்றைக்கட்டிக்கொண்டு, அதே ஆழ்துளைக்கிணற்றில் இறங்கி, மூழ்கவிருந்த மூதாட்டி ராதாவை காப்பாற்றி பத்திரமாக கையில் பிடித்தப்படி தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அதற்குள் உறவினர்கள், இது குறித்து அப்பகுதியில் இருக்கும் தீயைணைப்புத்துறைக்கு தகவல் தரவே... சம்பவ இடத்திற்கு வந்த தீயைணைப்புத்துறையினர், வைஷாக் கையில் பிடித்திருந்த மூதாட்டி ராதாவை வலைமூலம் மீட்டு மேலேக்கொண்டு வந்தனர். அதன்பிறகு வைஷாக் பத்திரமாக கிணற்றிலிருந்து மேலே வந்தார்.

வைஷாக், மூதாட்டி ராதாவிற்கு ஏற்படவிருந்த அசம்பாவிதத்தை தடுத்து, துணிச்சலுடன் அவரைக்காப்பாற்றிய சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், வைஷாக்கை பாராட்டியும் வருகின்றனர்.