மீட்கப்பட்ட தொழிலாளி கூகுள்
இந்தியா

கேரளா: சுவர் இடிந்து விழுந்ததில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி... நீண்ட முயற்சிக்குப்பின் மீட்பு!

Jayashree A

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி கடையில் சுவர் கட்டும் பணியானது நடந்து வந்துள்ளது. இப்பணியில் 4 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இவர்கள் கட்டிய 15 அடி உயரமுள்ள சுவரானது இடிந்து விழுந்துள்ளது.

இதில் மூன்று தொழிலாளிகள் உயிர் தப்பிய நிலையில், சைலன் என்ற 63 வயது தொழிலாளி மண்ணுக்குள் புதையுண்டார். உடனடியாக அங்கு புல்டோசர் வரவழைக்கப்பட்டு 15 நிமிடங்களில் அருகிலிருந்தோரே பாதுகாப்பாக அந்த இடத்தை தோண்டி உள்ளனர். இதில் தீவிர முயற்சிக்கு பிறகு சைலன் பத்திரமாக மீட்கப்பட்டார். இருப்பினும் அவரின் இரண்டு கால்களும் மண்ணில் புதையுண்டதால், அவரால் எளிதில் வெளியே வரமுடியவில்லை.

விபத்தில் சிக்கியவர்

பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அப்பகுதிக்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு சைலனை மீட்டு அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் சைலனின் இரு கால்களும் பலத்த சேதம் அடைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.