இந்தியா

பழனியில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை?- கேரளா சென்று தமிழக போலீசார் நேரடி விசாரணை

பழனியில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை?- கேரளா சென்று தமிழக போலீசார் நேரடி விசாரணை

kaleelrahman

பழனியில் கேரளாவை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து தமிழக போலீஸார் கேரளா மாநிலம் சென்று வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தம்பதிகளிடம் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் 19/ஆம் தேதி கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரியில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க பெண், கணவருடன் வந்தபோது மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி ஏடிஎஸ்பி சந்திரன் மற்றும் பழனி மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீசார இரண்டு குழுக்களாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரிக்கு சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரனையில் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து விசாரனை செய்த அறிக்கையை பெற்றனர். மேலும் தலசேரி உதவி ஆணையர் மூசாவை சந்தித்து அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக போலீசார் பெற்றுக்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அறிக்கை பெற்று கொண்டதுடன் அவரது கணவர் மற்றும் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட பூர்வாங்க விசாரணை அறிக்கையை தமிழக போலீசார் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவரையும் தலசேரி உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து சாட்சியம் பெற்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி ஒரு ரகசிய அறிக்கை அளித்தார். 

இதற்கிடையே புகாரில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரும் விதமாக தமிழக போலீசார் சார்பில் தடய அறிவியல் உதவி இயக்குனர் ராஜேஷ் தலைமையில் பழனியில் உள்ள தங்கும் விடுதியில் ஆய்வு செய்தனர்.