இந்தியா

இஸ்லாமிய மாணவிகள் குறித்த கேரள ஆசிரியரின் பேச்சால் சர்ச்சை!

இஸ்லாமிய மாணவிகள் குறித்த கேரள ஆசிரியரின் பேச்சால் சர்ச்சை!

webteam

கேரளாவில் இஸ்லாமிய மாணவிகள் ஆடை அணிவது குறித்து ஆசிரியர் ஒருவர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் ஃபரூக் கல்லூரியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருவபர் டி ஜவ்ஹர் முனாவிர். இவர் கோழிக்கோடு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, இஸ்லாமிய மாணவிகள் ஆடை அணிவது குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் இஸ்லாமிய மாணவிகளின் மனதை புண்படுத்தும் வகையில் அந்தப் பேச்சு அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக பல மாணவ சங்கங்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சில மாணவ அமைப்புகள் ஃபரூக் கல்லூரின் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் முனாவிரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பேசியுள்ள ஃபரூக் கல்லூரின் முதல்வர், முனாவ்விர் 3 மாதங்களுக்கு முன்னர் பேசியதை இப்போது பிரச்னையாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் முனாவிர் பேச்சில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வீடியோவாக வெட்டி, அது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.