எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள், கேரளாவில் 24 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி கேரள மாநிலம் முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் நள்ளிரவு துவங்கி நாளை நள்ளிரவு 12 மணி வரை மூடப்படுகிறது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த திடீர் அறிவிப்பால், பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்தில் பாதிப்பும், தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கேரளாவிற்குள் நெடுந்தொலைவு சென்ற சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறும், கேரளாவிற்கு சுற்றுலா வந்தவர்கள், வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் திண்டாடும் நிலையும் உருவாகியுள்ளது. போராட்ட அறிவிப்பால், பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக வழக்கத்திற்கு மாறாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.