சிறை freepik
இந்தியா

கேரளா: பிளேடை விழுங்கிய கைதி... இறுதியில் நடந்தது என்ன?

சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது குற்றவாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Jayashree A

கேரளாவின் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள புஜாப்புரா மத்திய சிறையில் இருக்கும் சுமேஷ் என்ற 31 வயது நபர் ஒருவரை மற்றொரு வழக்கு தொடர்பாக கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அச்சமயம் ஸ்ரீகார்யம் என்ற இடத்தில் பேருந்தானது நிறுத்தப்பட்டுள்ளது.

அச்சமயம் சுமேஷ் தான் பீடி குடிக்க வேண்டுமென போலீஸாரிடம் அனுமதி கேட்டு இருக்கிறார். முதலில் காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அதன்பிறகு கைதி சுமேஷ் ரகளை செய்யவும், வேறு வழியின்றி அனுமதித்துள்ளனர்.

மறைவான இடத்திற்கு சென்று சுமேஷ் பீடி குடித்துவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்பொழுது அவரது வாயிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதைப்பார்த்த போலீஸார், உடனடியாக அவரை அருகிலிருந்த கஜகூடம் போலிஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று, அவரது வாயை சோதனையிட்ட போது அவரது வாயில் பிளேடின் ஒரு பகுதி கிடைத்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல

இது குறித்து கைதியை விசாரிக்கும் பொழுது அவர் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்து பிளேடை முழுங்கியது தெரியவந்து. உடனடியாக போலீஸார் அவரை பங்பாரா குடும்ப நல மையத்திலும் பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர். சுமேஷுக்கு தற்பொழுது சிகிச்சை நடந்து வருகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.