இந்தியா

முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல்லின் ஜாமீன் மனு ரத்து

முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல்லின் ஜாமீன் மனு ரத்து

Rasus

கேரளாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல்லின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றம் பிராங்கோவின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

ஜலந்தரில் பேராயராக இருந்த பிராங்கோ முலக்கல் தம்மை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார்‌அளித்தார். இது தொடர்பாக பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த சூழலில் செப்டம்பர் 21-ஆம் தேதி, பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கீழ் நீதிமன்றம் பிராங்கோவின் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் கேரள உயர்நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.