கேரள நடிகர்கள் புதியதலைமுறை
இந்தியா

மல்லுவுட்வில் வீசும் புயல்.. கேரளாவை உலுக்கும் நடிகைகளின் பாலியல் புகார்கள்.. கள நிலவரம் என்ன?

Jayashree A

கேரளாவில் திரைப்பட துறையில் பாலியல் சீண்டல் குறித்து பாதிக்கப்பட்ட பல்வேறு நடிகைகள் குரல் எழுப்பி வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவாக கேரள அரசாங்கமானது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஹேமா என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இது குறித்து விசாரித்து வந்தது. இந்த அமைப்பானது தனது அறிக்கையில் ஒரு பகுதியை வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்த கேரளா திரைப்பட சங்கத்தின் தலைமை அதிகாரிகள் தனது பொறுப்பை ராஜினாமா செய்தனர்.

மேலும், கேரள நடிகர் சங்கமானது மாஃபியா போல செயல்பட்டு வருவதாகவும், பல முண்ணனி நடிகர்கள் மீதும் சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் யார் யார் கைது செய்யப்படுவார்கள்... என்று மொத்த திரைத்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் கொடுத்த பேட்டியில், தென்னிந்திய நடிகர் சங்கமானது 10 பேர் கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்தும், இந்த குழுவானது பாலியல் சீண்டல் குறித்து கண்காணிக்கும் என்றும் கூறியிருந்தார்.

கேரளாவில் செயல்படும் ஹேமா அமைப்பானது ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அது போன்று தமிழகத்திலும், ஒரு அமைப்பை தமிழக அரசு நிறுவவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது.