இந்தியா

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கேரள அரசு நடவடிக்கை

webteam

உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிக்கு தகுதிபெற்றும், கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட கேரள வீராங்கனை சித்ராவுக்கு அரசு உதவித்தொகையை அறிவித்துள்ளது.

உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட கேரள வீராங்கனை சித்ராவுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கேரள அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர்த்து உணவு மற்றும் பயிற்சிக்காக சித்ராவுக்கு தினமும் 500 ரூபாய் தினப்படி வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.

இதேபோல் மத்திய அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்ட கால்பந்து வீரர் சி.கே.வினித்துக்கு, கேரள தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.