இந்தியா

பக்ரீத் பண்டிகை: கூடுதல் தளர்வுகள் அளித்த கேரளா; மருத்துவச் சங்கம் எதிர்ப்பு

பக்ரீத் பண்டிகை: கூடுதல் தளர்வுகள் அளித்த கேரளா; மருத்துவச் சங்கம் எதிர்ப்பு

jagadeesh

கேரளாவில் பக்ரீத் பண்டிகை காரணமாக 3 நாட்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் நேற்று முதல் நாளை வரை துணிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது ஏன் என இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரவித்துள்ளது.

தளர்வுகள் அளிக்கப்பட்டது மக்கள் அதிகளவில் கூடுவதற்கு வழி வகுக்கும் என்றும் தற்போதைய மருத்துவ அவசர நிலை சூழலில் தளர்வுகள் தேவையற்றது எனவும் கூறியுள்ளது.

தளர்வுகளை கேரள அரசு திரும்பபெறாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.