கேரளாவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தலைக்கவசம் அணிந்து அரசு பேருந்தை ஒட்டுனர் இயக்கினார்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதோடு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இவையாவும் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் நடந்த என்ஐஏ சோதனை எனக்கூறி, அதைக் கண்டித்து கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து பல இடங்களில் பந்த் அறிவிப்பை மீறி இயக்கிய பேருந்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டன. இந்நிலையில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டுனர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து அரசு பேருந்தை இயக்கியுள்ளார். இக்காட்சிகள் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதை கலாய்த்தாலும்கூட, இதன் பின்னணியில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவே ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.