மாதிரி படம் கூகுள்
இந்தியா

மோசடியில் ஈடுபட கட்டாயப்படுத்தி கம்போடியாவில் இந்திய இளைஞர்கள் சித்ரவதை; வேலைக்கு அனுப்பிய நபர் கைது

கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கம்போடியா நாட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ய காரணமாக இருந்த நபரை கைது செய்த போலிசார்.

Jayashree A

கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலப்புழாவை அடுத்துள்ள சேப்பாட் கன்னிமேல் பகுதியைச் சேர்ந்தவர் அக்‌ஷய் (25 வயது). இவர் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். இவரது ஆசையைப் பயன்படுத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க பினிஷ்குமார் (34) என்ற இளைஞர் திட்டமிட்டுள்ளார். அக்‌ஷயிடம் ரூ.1,65,000 பணம் வாங்கிக்கொண்டு அவருந்து கம்போடியா நாட்டில் டெலிகாலர் வேலை வாங்கி தந்துள்ளார். அக்‌ஷயும் கம்போடியா சென்று நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பினிஷ்குமார் வாங்கிக்கொடுத்த டெலிகாலர் வேலையில் சேர்ந்துள்ளார்.

அதன்பிறகுதான் அக்‌ஷய்க்கு அந்த வேலை பற்றிய புரிதல் தெரிந்துள்ளது. டெலிகாலரில் AI உதவியைக்கொண்டு மக்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறிக்கும் வேலையைச் செய்வதற்காக கம்போடியா வந்தது தெரியவந்தது. அந்த வேலையை செய்ய மறுத்துள்ளார் அக்‌ஷய். இவருடன் பல இந்தியர்களும் இந்த வேலையை செய்ய மறுத்துள்ளனர். மறுத்த இளைஞர்களை பலநாட்கள் இருட்டு அறையில் அடைக்கப்பட்டு உடல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளது அந்த நிறுவனம்.

தனது மகன் அக்க்ஷய் கம்போடியா நாட்டில் துன்பப்படுவது குறித்து சாந்தகுமாரன் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தூதரகம் தலையிட்டு அக்‌ஷய் மற்றும் அவருடன் இருந்த சுமார் அறுபது இந்திய இளைஞர்களை கடந்த மே மாதம் மீட்டு அவரது வீட்டிற்கு அனுப்பியது.

குற்றம்

இதில் சாந்தகுமாரன் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆலப்புழா போலிசார் பினிஷ்குமாரை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். இந்நிலையில், மூணாறில் பினிஷ்குமார் இருப்பதை தெரிந்துக்கொண்ட போலிசார் அங்கு சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.