இந்தியா

ரூ.1000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்: காப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு

ரூ.1000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்: காப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு

Rasus

கேரளாவில் வெள்ள பாதிப்புகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாக தர வேண்டியிருக்கும் என காப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. காப்பீட்டு பகுப்பாய்வு நிறுவனங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

வெள்ளத்தால் கேரளாவுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் கூறியிருந்த நிலையில் அதில் 5 சதவிகித அளவை காப்பீட்டு நிறுவனங்கள் தர உள்ளன. ஆயுள் காப்பீடு தவிர வீடு, வாகனம், பயிர்கள் உள்ளிட்ட வகைகளிலும் இந்த இழப்பீட்டுத் தொகை தரப்பட உள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. மேலும் இத்தொகையை விரைந்து பெறுவதற்காக சில விதிகளை காப்பீட்டு நிறுவனங்கள் தளர்த்தியுள்ளன.