இந்தியா

கேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்

webteam

கேரளாவில் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும் படி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். 

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நீடிக்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, வாளையார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலக்காடு - மலம்புழா பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும் படி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் மீட்க இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கேரள முதலமைச்சரிடம் அவர் கூறியுள்ளார்.