இந்தியா

சாலையில் தடுப்புகளை வைத்து சொகுசு வாக்கிங்: காவல்துறை அதிகாரிக்கு நோட்டீஸ்!

சாலையில் தடுப்புகளை வைத்து சொகுசு வாக்கிங்: காவல்துறை அதிகாரிக்கு நோட்டீஸ்!

ச. முத்துகிருஷ்ணன்

கொச்சியில் தனது காலை நடைப்பயணத்திற்காக சாலையில் தடுப்புகளை வைத்து இடையூறு செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கேரள காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கொச்சியில் க்யூஸ் நடைபாதையில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6-7 மணி வரை குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு சாலையின் பகுதி பொதுவாக மூடப்பட்டிருக்கும். ஆனால் மற்ற நாட்களிலும் சாலை அந்த குறிப்பிட்ட வேளைகளில் சாலை தடுப்புகள் வைத்து மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் சாலை மூடப்பட்டுள்ளதால் அன்றாடப் பயணங்களில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எதற்காக சாலை மூடப்படுகிறது என்பதை விசாரித்தபோது கேரள போக்குவரத்து மேற்கு காவல் உதவி ஆணையர் வினோத் பிள்ளை, க்யூஸ் நடைபாதையில் காலை நடைப்பயிற்சி செய்ய வருவதற்காக சாலை மூடப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கேரள போக்குவரத்து மேற்கு காவல் உதவி ஆணையர் வினோத் பிள்ளைக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.