இந்தியா

விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொரோனா - குவாரண்டைனில் கேரள முதல்வர்

விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொரோனா - குவாரண்டைனில் கேரள முதல்வர்

webteam

கோழிக்கோடு விமான விபத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், அமைச்சர்கள் கே.கே. சைலஜா, ஜெயராஜன், ராமச்சந்திரன் காடன்னபள்ளி, ஜலீல், சசீந்திரன், மொய்தீன், சுனில்குமார் மற்றும் தலைமைச்செயலர் விஷ்வாஸ் மேத்தா, கேர மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா உள்ளிட்டோர் விமான விபத்து நடந்த காரிப்பூர் சென்றுவந்தார்கள்.

சுய தனிமைப்படுத்தல் காரணமாக சுதந்தர தினக் கொண்டாட்டத்தில் கேரள முதல்வர் கலந்துகொள்ளமாட்டார். அதற்குப் பதிலாக தேசியக்கொடியை சுற்றுலாதத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஏற்றிவைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.