சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது உண்மைதான் என்பதை என பினராயி தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் காவல்துறையினரின் முழு பாதுகாப்புடன் இந்த தரிசனத்தை செய்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இன்று அதிகாலை சபரிலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர் என்ற தகவல் வெளியானது. அதில், சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள், அதிகாலையில் கோயிலுக்குச் சென்றதால் போராட்டக்காரர்கள் பார்வையில் படவில்லை. ஏற்கெனவே கடந்த வாரம் சபரிமலை சென்ற போது போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டனர்.
இந்நிலையில் கனகா, துர்கா ஆகிய இரண்டு பெண்கள்தான் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு காவல்துறையினர் முழுப்பாதுகாப்பு அளித்து, அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் பொது வழியில் சென்று தரிசனம் செய்ததாகவும், அவர்கள் 18 படிகளை ஏறவில்லை என்றும் கூறப்படுகிறது.