கேரளா மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் காரில் கொண்டு வந்த தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்ற கும்பல் அதன் சிசிடிவி காட்சிகள்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கல்லிடுக்கி பகுதியில் காரை வழிமறித்த கும்பல் ஒன்று பட்டப்பகலில் தங்க வியாபாரியிடம் இருந்து சுமார் இரண்டரை கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி அருண் சன்னி மற்றும் அவருடன் இன்னொருவர் என இருவர் கோயம்புத்தூரில் இருந்து நகைகளுடன் திருச்சூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, மூன்று காரில் வந்த கொள்ளையர்கள் ( குற்றவாளிகள் ) கல்லிடுக்கு பகுதியின் அருகே உள்ள சாலையில் காரை வழிமறித்து காரின் பாதையைத் தடுக்கும் வகையில் நிறுத்தி இருந்தனர்.
கையில் ஆயுதங்களுடன் வந்து தங்கத்தை கேட்க.. அவர்கள் கொடுக்க மறுக்க.. தங்கம் கொண்டு வந்த இருவரையும் மற்றொரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதுடன் நகை இருந்த காரை கடத்தி சென்றனர். தொடர்ந்து நகை வியாபாரி இருவரையும் கொஞ்ச துரம் சென்று இறக்கி விட்டு அந்த கும்பல் வாகனத்துடன் மாயமானார்கள்.
இந்த கொள்ளை நேற்று சுமார் 11.45 அளவில் நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் பாதிக்கப்பட்டவரின் காருக்குப் பின்னால் உள்ள வாகனத்தில் சிசிடிவியில் இருந்துள்ளது. காட்சிகளை கைப்பற்றி கேரளா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.