இந்தியா

கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்

கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்

webteam

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. கன்னியாஸ்திரியான இவர், 1914-ம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். இதன் மூலம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து உதவி கள் செய்து வந்தார்.

தொடர்ந்து சமூகப்பணி ஆற்றிவந்த மரியம் திரேசியா, கடந்த 1926-ம் ஆண்டு தனது 50-வது வயதில் மரணமடைந்தார். அவரது சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று போப் பிரான்சிஸ், கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அதற்கான நிகழ்ச்சி வாடிகன் நகரில் இன்று நடக்கிறது.

இந்த விழாவில், மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தலைமையிலான சிறப்புக்குழு பங் கேற்கிறது. இதற்காக இந்த குழு வாடிகன் சென்றுள்ளது.