அர்ஜூன் கூகுள்
இந்தியா

கேரளா | ஷிரூர் நிலச்சரிவில் காணாமல் போன அர்ஜூனின் மனைவிக்கு கூட்டுறவு வங்கி வேலை!

கடந்த வாரம் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக, மங்களூரு கோவா வழித்தடத்தில் ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சிலரின் உடலை தேடும் பணியானது பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது.

Jayashree A

கடந்த வாரம் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக, மங்களூரு கோவா வழித்தடத்தில் ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிலரின் உடலை தேடும் பணியானது பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இருப்பினும் காணாமல் போனவர்களின் சடலம் கிடைக்காத நிலையில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணப்பிரியா

கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் தனது லாரியில் 200 டன் எடைக்கொண்ட மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியே சென்ற பொழுது நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். இதை அடுத்து கேரள அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப கர்நாடக அரசு அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியது எனினும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அர்ஜூனின் குடும்பத்தை கருத்தில் கொண்ட கேரள அரசு அர்ஜூனின் மனைவி கிருஷ்ணப்பிரியாவிற்கு கோழிக்கோடு வெங்கேரி கூட்டுறவு வங்கியில் தற்காலிக கிளர்காக வேலை அளித்துள்ளது. மேலும், இப்பணியை விதிகளின் படி நிரந்தரமாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.