இந்தியா

கேரளா: மணப்பெண் நகைகளை பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த மணமகன்

கேரளா: மணப்பெண் நகைகளை பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த மணமகன்

Veeramani

வரதட்சனை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கேரள மாநிலத்தில், மணமகன் திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை, பெண் வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆலப்புழா மாவட்டம் நூரநாடு பகுதியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர் சதீஷ், தனது திருமண நிச்சயத்தின்போது வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் கூறியிருந்தார். ஆனாலும், திருமணத்தன்று தனது பெற்றோர் சீதனமாகக் கொடுத்த 50 சவரன் நகைகளை அணிந்தபடி மணமேடைக்கு வந்தார் மணமகள் ஸ்ருதி. இதைக்கண்ட சதீஷ், தனது கொள்கையே வரதட்சனை வாங்கக் கூடாது என்பதுதான் எனக் கூறி, திருமணம் முடிந்ததும் மணமகள் அணிந்திருந்த நகைகளை பெற்றோரிடம் ஒப்படைக்கச் செய்தார். கட்டிய தாலியுடன் மணப்பெண் ஸ்ருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீஷின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.