இந்தியா

சுற்றுலா தலமாகிறது மோடியின் ‘தியான் குதியா’ குகை

சுற்றுலா தலமாகிறது மோடியின் ‘தியான் குதியா’ குகை

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த குகை ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது.

தேர்தல் பரப்புரை முடிந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் பாரம்பரிய உடை அணிந்து வழிபட்டார். பின்னர், ‘தியான் குதியா’என்ற குகையில் சுமார் 17 மணி நேரம் மோடி தியானம் மேற்கொண்டார். தரையிலிருந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அந்தக் குகை இருந்தது. இக்குகையில் கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மோடி தியானம் செய்த படங்கள் ஊடங்களில் வைரலானது. 

இந்நிலையில், மோடி தியானம் செய்த குகையானது ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது. கேதார்நாத்திலுள்ள கார்வல் மண்டல் விகாஸ் நிகாம் என்ற மத்திய அரசின் சுற்றுலா நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. “சுற்றுலா பயணிகளுக்கான ஆன் லைன் முன்பதிவு விரைவில் ஆரம்பமாகும். தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தற்போது முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று  அந்த நிறுவத்தின் மேனேஜர் ராணா கூறியுள்ளார்.  

குகை மிகவும் ஆடம்பரமாக இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார். ஒரு சிறிய படுக்கை, ஒரு பக்கெட் மற்றும் குளிக்க ஒரு ஜக் அவ்வளதான் இருக்கும் என்று ராணா தெரிவித்தார். மின்சார வசதி இருக்கும் ஆனால், மொபைல் போன்களுக்கான நெட்வொர்ட் வசதி இருக்காது என்றும் அவர் கூறினார்.

முன்பு 3000 ரூபாயாக இருந்த குகை வாடகை தற்போது மிகவும் குறைக்கப்பட்டு ஒரு நாள் ஒன்றிற்கு ரூ990 மட்டுமே வாங்கப்படுகிறது.