இந்தியா

கத்துவா சிறுமி வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கத்துவா சிறுமி வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசா‌ரணை தொடங்குகிறது. இதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறார் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது. 8 பேரில், சிறார் மீதான விசாரணையை மட்டும் நிறுத்திவிட்டு, மற்றவர்கள் மீதான விசாரணையை கத்துவா மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.