இந்தியா

சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: எது வதந்தி? எது உண்மை?

சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: எது வதந்தி? எது உண்மை?

webteam

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுப் பிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்தச் சம்பவம் கடந்த ஒருவாரமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆசிஃபா வழக்கை சிபிஐ மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தினர். அதைக்கொண்டு பொய் தகவல்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதில் சங்க்நாத் என்ற பெயரில் பகிரப்பட்ட வதந்திகள், ஃபேஸ்புக்கில் 7,600 முறை பகிரப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட வதந்திகள்:

வதந்தி 1 : ஆசிஃபாவின் முதல் பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்பட்டதாக மட்டும் இருந்தது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. 

உண்மை : ஆசிஃபாவை சிறுவன் உட்பட 8 பேர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து,  கொலை செய்ததை டெல்லி தடவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வதந்தி 2 : மக்கள் அதிகமாக வந்து செல்லும் சாலையின் நடுவில் உள்ள ஒரு கோவிலில், ஒரு சிறுமியை 8 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வாய்ப்பில்லை.

உண்மை : சஞ்சிராம் என்ற ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி,  இந்தக் குற்றச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலை இவர்தான் நிர்வகித்து வந்தார். சிறுமியை கோவிலுக்கு அழைத்து வந்தது 15 வயது சிறுவன். அங்கு அழைத்து வந்து மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வதந்தி 3 : அந்த சிறுமியின் உடலில் சேறு பூசப்பட்டிருந்தது. அது கோவில் இருக்கும் பகுதியில் உள்ள சேறு அல்ல. எனவே சிறுமி வேறு எங்கோ கொல்லப்பட்டு, உடல் கோயில் வளாகத்தில் வீசப்பட்டுள்ளது.

உண்மை : சிறுமியை கொன்று வனப்பகுதியில் வீசியிள்ளனர். 10 நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலில் சேறு இருந்துள்ளது. அந்த சேறு பூசப்பட்டிருந்த அடையாளங்களை போலீஸாரே அழித்துள்ளனர். இதனை பின்னர் விசாரித்த குற்றப்பிரிவு சிறப்புக்குழுவினர், சாதுர்யமாக கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வந்தனர்.

வதந்தி 4 : அந்தப் பகுதி மக்கள், ரோஹிங்கியாவில் இருந்து வந்து வசிப்பவர்களை விசாரிக்க கோரினர். ஆனால் முட்டாள் அரசு அவர்களை அச்சுறுத்திவிட்டது.

உண்மை : இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ‘இந்து ஏக்தா மன்ச்’ என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. அத்துடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவுோரடியது. எனவே குற்றவியல் தனிப்படையின் விசாரணைக்கு தடையாகவும் இருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

வதந்தி 5 : ஒரு புதிய வழக்கை உருவாக்க இர்ஃபான் வானி என்ற அதிகாரியை அந்த அரசு அனுப்பியுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல், சிறுமியின் சகோதரரை விசாரணையின் போது காவல்நிலையத்திலேயே கொன்றவர்.

உண்மை : இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்ததும், ரமேஷ் குமார் ஜல்லா என்ற குற்றவியல் தனிப்படையை தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் நியமித்தார். இந்தக்குழு கையில் எடுத்த விசாரணைகளில், யாருக்கும் சாதகமாக செயல்பட்டதில்லை. கண்டுபிடிக்க முடியாத சில சிக்கலான வழக்குகளையும், இந்த அதிரடிப்படை கண்டுபிடித்துள்ளது. 

வதந்தி 6 : இர்ஃபான் வானி வந்தவுடன் ஒரு புதிய அறிக்கையை தாக்கல் செய்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஆதாரம் இன்றி பதிவுசெய்யப்பட்டது. அத்துடன் விசாரணை என்ற பெயரில் அப்பகுதியினர் கொடுமைப்படுத்தப்பட்டனர். 

உண்மை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தது தடவியல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை குற்றவியல் தனிப்படைக்குழு விசாரித்து உறுதிப்படுத்தியது.

வதந்தி 7 : இதில் குற்றவாளிகள் காக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காவலர் உட்பட அப்பாவிகள் குற்றாவளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

உண்மை : குற்றவாளிகள் எனக்கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்ற 2 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா      செய்துள்ளனர். ஆசிஃபாவின் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தீபிகாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.