இந்தியா

ஜம்மு- காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு: அமித் ஷா அறிவிப்பு

webteam

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.  
இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல் லா ,மெஹபூபா முப்தி  ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள் ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. 

இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்தும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண் டாக பிரிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரையும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கையும் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே, மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதை உறுப்பினர் கள் ஏற்காததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதால் மாநில அந்தஸ்தை அது இழந்துள்ளது.