மோடி புதியதலைமுறை
இந்தியா

”போருக்கு பிறகும் பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை” - கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி உரை!

PT WEB

அண்மைக் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட போர் என்றால், அது கார்கில் போர் தான். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, வெற்றிக்கொடியை நாட்டிய வரலாற்றின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

காஷ்மீரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் 25ஆவது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி லடாக் பகுதியில் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது, “கார்கில் போருக்குப் பிறகும் பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை; அது தொடர்ந்து பயங்கரவாதம் மற்றும் மறைமுக போர்களை நடத்திக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவைக்கு நாடும், மக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தீய நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது.

கார்கில் போரில் தங்களை அர்ப்பணித்த வீரர்களுக்கு நமது நாடு மரியாதை செலுத்துகிறது; கார்கில் போரில் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்கு என்றும் மரணமில்லை. நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதத்தை முழு சக்தியுடன் எதிர்த்துப் போராடுவார்கள்” என்று பிரதமர் பேசினார்.